• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் 30.01.2026 காலை சுமார் 12 மணியளவில் துறையூர் பகுதியில் உள்ள ஜெய் ஸ்ரீ கார்டன் மஹாலில் இலக்கு மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு-2026 மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் 30.01.2026 காலை சுமார் 12 மணியளவில் துறையூர் பகுதியில் உள்ள ஜெய் ஸ்ரீ கார்டன் மஹாலில் இலக்கு மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு-2026 மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Email :113

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் 30.01.2026 காலை சுமார் 12 மணியளவில் துறையூர் பகுதியில் உள்ள ஜெய் ஸ்ரீ கார்டன் மஹாலில் இலக்கு மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு-2026 மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருமிகு முனைவர் அம்பலவாணன் மக்கள் மேம்பாட்டு வினையக (PDI) திட்ட இயக்குநர் அவர்கள் திட்ட விளக்க உரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக  தலைமையுரையாற்ற வருகை தந்த திருமிகு.விமல்ஆரோக்கியமேரி ஒருங்கினைந்த திட்ட மேலாளர், அவர்களையும் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொண்ட திரு.S.சுரேஷ்குமார் தாய் கோவில் நிறுவனர், லயன்ஸ் மாவட்ட 324-F செயலாளர் அவர்களையும்.

வாழ்த்துரை வழங்கிய திரு.ஆனந்த் SRM மருத்துவ முகாம் ஒருங்கினைப்பாளர் அவர்களையும் சிறப்புரை வழங்கிய திரு.P.ராஜேஸ்வரன் REACH திட்டம்  அவர்களையும் மேலும் சிறப்புரையற்றிய திருமிகு.லாவண்யா துறையூர் பகுதி சமூக நல ஆர்வலர் அவர்களையும் 
திரு.முத்துக்குமார் திட்ட மேலாளர்(PDI) அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 13 நபர்கள் இரத்ததானம் செய்தனர். மேலும் REACH திட்டம் மூலம் அனைவருக்கும் TB பரிசோதனை 68 நபர்களுக்கு செய்யப்பட்டது அத்துடன் துறையூர் அரசு மருத்துவமனை ICTC/STI ஆலோசகர்கள் மூலம் HIV/VDRL பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச பொது மருத்துவ சிகிச்சை வழங்கபட்டது.

விளிம்புநிலை இலக்குமக்கள் சுமார் 132 நபர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் திரு.முரளி TI திட்ட முன்மாதிரி கல்வியாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts