• Home
  • தமிழ்நாடு
  • இன்று 17.01.2025 பிறந்தநாள் காணும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் திரு. நீலமேகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு

இன்று 17.01.2025 பிறந்தநாள் காணும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் திரு. நீலமேகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Email :206

இன்று 17.01.2025 பிறந்தநாள் காணும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர்,
செங்கரும்பு மனத்தார்
சேவைமிகு குணத்தார்
மண் பயனுற உழைப்பார்
மக்கள் சக்தியாக உயர்ந்தார்
மரங்கள் விரும்பும் மாண்பு பெற்றார்.
மரங்கள் காத்தார்
அறங்கள் காத்தார்
வீரமறங்கள் வளர்த்தார்
உறவுகள் பேணும் வரங்கள் கொண்டார்
தோழமை போற்றும் நெஞ்சத்தார்
ஓய்வறியா நடை போவார்
தொய்வில்லா எறும்பாவார்
எவ்வுயிர்க்கும் தாயாவார்
எப்போதும்
ஏற்றம் தரும் செயலாவார்,
சமூக அறம் காக்கும் கருப்பு சாமியாவார்
பொன்மலைக்குப் புகழ் சேர்க்கும் நீலமேகமாவார்
சகல மனிதர்களையும் நேசிக்கும்
சப்பாணிப்பட்டியார்
வாழிய நூறாண்டு
வாழியவே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
☀️☀️🌾🌾☀️☀️🎂🎂🍫🍫💙💙❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts