
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியம், இருங்கலூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் உள்ள மாற்றுத்திறனாளிகள் இணைந்து சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற நலச்சங்கம் இணைந்து பொங்கல் விழாவானது நடத்தப்பட்டது.
இதில் வரவேற்புரை திரு ராபின்சன் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாக திரு மாரி கண்ணன் மாவட்ட திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற நலச்சங்கத்தின் செயலாளர் அவர்கள் வாழ்த்துரை கூறி அதன் பின் அப்பகுதி

மாற்றுத்திறனாளி பொறுப்பாளர் திருமதி பாப்பாத்தி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மொத்தம் 80 நபர்கள் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தது சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் திரு .ராபின்சன் திருச்சி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.














