“திருச்சி மாவட்டம் தாயனூர் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு பரதநாட்டியம் பயிற்சி”.
ஆக்கம்:
எஸ். சிவகுமார்,
முதல்வர்( பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம்.
Mob..6383690730.

திருச்சி மாவட்டம் தாயனூர் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு பரதநாட்டியம் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வழங்கி அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியை சமூக ஆர்வலர் மற்றும், பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் பெற்றவருமான திருமதி ஷர்மிளா வழங்கி வருகிறார்.
பரதநாட்டியம் கலை மூலம் குழந்தைகளுக்கு ஆளுமை வளர்ச்சி, ஒழுக்கம், மற்றும் பாரம்பரிய அறிவுடன் இணைந்து அளிக்க படுவதால் இந்தக் கலைபயிற்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பயிற்சியின் சிறப்பு:
கற்றல் முறையின் தனிச்சிறப்பு:
பரதநாட்டிய கலைஞர் திருமதி. ஷர்மிளா, குழந்தைகளின் திறனை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற வகையில் பரதநாட்டியத்தின் அடிப்படைகள் முதல் உயர்தரத்தில் பயிற்சி அளித்து வருகிறார்.

வழிகாட்டுதல்:
இந்த பயிற்சி சிறப்பாக நடைபெற சமூக ஆர்வலர்(Inner Wheel Club) திருமதி கண்ணாத்தா தனது அனுபவம், மற்றும் வழிகாட்டுதல் மூலம் பயிற்சியின் தரத்தை உறுதிசெய்கிறார்.
ஒருங்கிணைப்பு:
சமூக ஆர்வலரான ஆர். ராஜமாணிக்கம், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆக செயல்பட்டு, திட்டமிடல் மற்றும் பங்குபெறுபவர்களை இணைக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
பயிற்சியின் விளைவுகள்:
குழந்தைகள் பாரம்பரிய கலைகளுக்கு மதிப்பளிக்கவும் அதனை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காணப்படுகிறது.
பரதநாட்டியத்தின் மூலம் குழந்தைகள் உடல் மற்றும் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறார்கள்.
தாயனூர் கிராமத்தில் கலாச்சார வளர்ச்சிக்கான ஒரு புதிய அத்தியாயமாக இது அமைகிறது.
சமூகத்தின் பங்கு:
இந்த முயற்சி முழுமையாக வெற்றிகரமாக செயல்படத் தாயனூர் சமூகத்தின் ஆர்வமும் ஆதரவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தாயனூரில் நடைபெறும் பரதநாட்டியம் பயிற்சி முறை பாரம்பரியத்தை பாதுகாத்து, குழந்தைகளின் கலைமிகு வாழ்க்கையை உருவாக்கும் முக்கியமான தொடக்கமாக திகழ்கிறது.
நன்றி.

