
இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடத்தில் பொதுமக்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சியானது சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இணைந்து கலை நிகழ்ச்சி மற்றும் பாடல்கள் வழியாக விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மணிகண்டம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ரத்த சோகையை நான் ஏற்படக்கூடிய தீமைகள் அதனைத் தொடர்ந்து அதன் வழியாக நமது குழந்தைகள் எவ்வாறு

பாதிப்படைகிறார்கள் என்பதை பற்றியும் நாம் உண்ண வேண்டிய உணவுகள் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப உதவி இயக்குனர் அவர்கள் மக்கள் அனைவரும்

ஊட்டச்சத்தை முழுமையாக உண்ண நமது உடலை நன்றாக பராமரிக்க வேண்டும் அதற்காக இந்த நிகழ்வை ஏற்படுத்திக் கொடுத்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலருக்கு நன்றி இணை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் விழிப்புணர்வு நாடகம் விழிப்புணர்வு பாடல் மற்றும் விழிப்புணர்வு நடனம் அத்தின் வழியாக மக்களுக்கு ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 80 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ஊட்டச்சத்தாக கொண்டக்கடலை மற்றும் கம்பங்கூழ் வழங்கப்பட்டது நன்றி உரையாக திரு ராபின்சன் திவாகரன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.












