கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு “இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டத்தில் கல்வி மற்றும் பயிற்சியானது” திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் “ஆங்கிலாடு இயற்கை வரலாற்று நிறுவனம்” திரு இருதய கல்லூரி, செண்பகனூர் கொடைக்கானலில் மூன்று நாள் பயிற்சி அளித்து வருகிறது.


18.09.25 முதல் 20.09 . 25 வரை 2 ஆம் ஆண்டு இளம் அறிவியல் செயற்கை நுண்ணறிவுத்துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப் பயிற்சியானது 1984 ஆம் ஆண்டு அருட்தந்தை கே எம் மேத்யூ, சே. ச அவர்களால் தொடங்கப்பட்டு அருட்தந்தை ஜான் பிரிட்டோ சே ச அவர்களால் வழிநடத்தப்பட்டது, தற்பொழுது அருட்தந்தை அருளானந்தம் சே ச இயக்குனராகவும், அருட்தந்தை ஆன்டோ சே ச மற்றும் அருட் சகோதரர் தேவதாஸ் சே ச அவர்களின் பராமரிப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை எஸ் மரியதாஸ் சே. ச செப்பர்டு விரிவாக்கத்துறை இயக்குனர் அருள் முனைவர் T. சகாயராஜ் சே ச அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் படி விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு S லெனின், திரு ஜெயசந்திரன், திரு ஜெயசீலன், திரு T.J. கிறிஸ்து ராஜா, திருமதி ய சோ தை , திரு சுதாகர் என ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஒருங்கிணைப்பில் கல்லூரியின் அனைத்து துறை மாணவர்களும் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர் இப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள் மற்றும் திரு ஆனந்த் அவர்கள் சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இப்பயிற்சியில் தற்பொழுது பெருகி வரும் “காலநிலை நெருக்கடி” பாதிப்புகள் குறித்தும் உலகளாவிய, இந்திய அளவில், தமிழக அளவில், நம் அருகாமையிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலை குறித்து ம் பல்லுயிர்களுக்கு அளிக்கும் நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும், அழிவுகள் குறித்தும், அதனை பாதுகாக்கும் விதமாக களப்பார்வையில் இயற்கை பாதுகாப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மூன்று நாள் பயிற்சியில் சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இப்பயிற்சி பெற்றபின் கல்லூரி மாணவர்கள் செப்பர்ட் விரிவாக்கத்துறை மூலமாக கல்வி மற்றும் சமூகப் பணியில் ஈடுபடும் சேவை கிராமங்களில் மற்றும் நகர குடிசைப் பகுதிகளிலும் மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை வீட்டுத்தோட்டம், மூலிகை வளர்ப்பு, சமூக காடுகள் வளர்ப்பு, நாற்றுப்பண்ணை உருவாக்குதல், பாரம்பரிய மரங்களை காய்கறி விதைகளை பாதுகாத்தல், பரவலாக்குதல் பராமரித்தல் என விழிப்புணர்வு முகாம் மற்றும் திட்ட செயல்பாடுகளாகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் . கல்லூரியின் முதல் பருவத்திலே இதுவரை 8 குழுக்களாக 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.

மேலும் பயிற்சி பெற இருக்கின்றனர் 2025 செப்டம்பர் 18 முதல் 20 வரை நடைபெற்ற பயிற்சியில் இளம் அறிவியல் செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் திரு சார்லஸ், பேராசிரியர்கள் திரு மோகன்ராஜ் திருமதி திலகவதி மாணவர்களோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














