தொடர்ச்சியான கற்றலும் நற்பண்பு வளர்ச்சியும் – திருநெல்வேலியில் சிறப்பு பயிற்சி!
திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சுய கற்றல் மற்றும் நற்பண்பு கல்வி தொடர்பான ஒருநாள் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.
குழந்தைகளிடம் தொடர்ச்சியான கற்றல் பழக்கத்தையும், நல்ல குடிமகனாக உருவாகும் பண்புகளையும் வளர்ப்பதே இப்பயிற்சியின் நோக்கமாக அமைந்தது.
நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர் திரு. A. முருகன் (மானூர்) தொடங்கி வைத்து வரவேற்றார்.

முற்பகல் அமர்வில், 11 வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் கள அனுபவங்கள், சவால்கள் மற்றும் பயன்களைப் பகிர்ந்து கொண்டு, சுய கற்றலை கல்வி பண்பாடாக மாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.
பிற்பகல் அமர்வில், 11 ஒன்றியங்களிலுள்ள 45 தொடக்கப் பள்ளிகளில் 15 மாதங்களாக நடைமுறையில் உள்ள சுய கற்றல் திட்டம் குறித்து விளக்கப்பட்டது.
பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரங்களில், விடுமுறைகளில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மாணவர்கள் வீட்டிலேயே கற்று, ஆடியோ-வீடியோ பதிவுகள் அனுப்பி வருகின்றனர். இதனால் கற்றல் இழப்பு குறைந்து, மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் DIET முன்னாள் முதல்வர் திரு. எஸ். சிவக்குமார் நற்பண்பு கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. M. சிவகுமார் நற்பண்புகளை குழந்தைகள் வீட்டிலும் மற்றும் பள்ளியிலும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார் மற்றும் DEO (பொறுப்பு) திரு. E. ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியில் திருமதி த. ஜெபரத்தினம் சுகந்தி நன்றி தெரிவித்தார்.














