கற்றல் விளைவு உயர்த்தும் சுயகற்றல் முயற்சி – ஆர்.சி. தொடக்கப்பள்ளி, இலங்குளம்!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட இலங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, சுயகற்றலில் சிறந்து விளங்கும் கல்வி நிலையமாக திகழ்கிறது.
இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செ. செல்வகனி அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முன்னோக்கிய பார்வையால், மாணவர்களின் வீட்டுச் சூழல் கூட கற்றல் சூழலாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, கரும்பலகை (Blackboard) பயன்பாடு மாணவர்களின் எழுத்துப் பயிற்சி மற்றும் வாசிப்புப் பயிற்சிக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

கரும்பலகை மூலம் தினசரி எழுதும் பழக்கமும், வாசிக்கும் திறனும் மேம்பட்டு, மாணவர்களின் கற்றல் விளைவு (Learning Outcome) கணிசமாக உயர்ந்து வருகிறது. கற்றலின் தரம் உயரும் போது, பள்ளியின் சேர்க்கை விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
கல்வி கற்காமல் இருந்த மாணவர்களுக்கும் இப்பள்ளியில் சேர்ந்து பயில நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. இது கல்வி சமத்துவத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கியமான படியாகும்.

தலைமையாசிரியரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது மட்டுமல்லாமல், பிற பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக அமைகிறது.
ஆக்கம்:
எஸ். சிவகுமார்
பணி நிறைவு முதல்வர்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையம் (DIET),
காஞ்சிபுரம் மாவட்டம்.














