• Home
  • தமிழ்நாடு
  • இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு!
தமிழ்நாடு

இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு!

Email :114

இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் தின விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் வெளியிட கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து  கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர்  ஜோதி, பேராசிரியர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் விழாவில்  பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts