“பாரதியார் நினைவு நகராட்சி தொடக்கப்பள்ளி, திருவானைக்கோவில், திருச்சி மாவட்டம் – குழந்தையின் கல்வி வளர்ச்சியில் அரசு வழங்கிய ஸ்மார்ட் போர்டு”.
“தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முயற்சியின் தாக்கம்”
ஆக்கம்: எஸ் சிவகுமார், முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்
Mob.. 6383690730
மாணவர்களிடையே பல்நோக்கு பலகை (Smart Board)குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆசிரியை திருமதி அனுராதா, சரண்யா புள்ளி விவரம் சேகரிப்பாளர், காலை உணவு மேற்பார்வையாளர் வனிதா
மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் ஜெயராமன் கூறுகையில், குழந்தைகள் பல்நோக்கு பலகை பயன்படுத்தும்போது வகுப்பறையில் கூர்ந்து கவனம் செலுத்துகிறார்கள்,
கவனச் சிதறல் இல்லாமல் பாடங்களை பூரணமாகப் புரிந்துகொள்கிறார்கள் என்றார்.
ஆசிரியை அனுராதா கூறுகையில், மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்கிறார்கள், பாடங்களை படங்களாக திரையில் காணும்போது அவர்களின் பாடத்தொடர்பு மேலும் வலுப்படுகிறது.
முன்னாள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம், S.சிவக்குமார் கூறியதாவது, சில கடினமான கருத்துகளை(Abstract) ஆசிரியர்கள் விளக்க முடியாவிட்டாலும், ஸ்மார்ட் போர்டு வழியாக காணொளி மூலம் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்கிறார்கள் என்று பகிர்ந்துகொண்டார். மேலும்
அரசு வழங்கிய பல்நோக்கு பலகை, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதில் மிகுந்த பயனளிக்கிறது எனக் கூறினார்.
ஸ்மார்ட் போர்டு பயன்பாட்டின் நன்மைகள்:
கடினமான பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.
பாடங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள உற்சாகத்தை ஊக்குவிக்கும்.
காட்சி மற்றும் காணொளி வழி கற்பித்தல் மூலம் விளக்கம் மேலும் தெளிவாகிறது.
மாணவர்களின் கல்வி தரம் உயர்வதை உறுதி செய்கிறது.

முடிவு: நவீன கற்பித்தல் முறையில் ஸ்மார்ட் போர்டுகள் ஒரு முக்கிய சாதனமாக மாறியுள்ளன. அரசு வழங்கிய இந்த தொழில்நுட்பம், பாரம்பரிய கற்பித்தல் முறையிலிருந்து தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் உலகத்திற்கு பாலமாக செயல்படுகிறது. மாணவர்களின் ஆர்வத்தையும் அறிவுத் திறனையும் அதிகரிக்க, ஸ்மார்ட் போர்டுகளின் பங்கு முக்கியமானதாக விளங்குகிறது.


