
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட இறுதியாண்டு மாணவ மாணாவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை ஏப்ரல் 24, 2025 வியாழக்கிழமையான இன்று மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் மற்றும் தளாளர் ஸ்ரீ CA வெங்கடேஷ்.R மற்றும் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி துணை முதல்வர்கள் முனைவர் வி.உபேந்திரன் மற்றும் முனைவர் ஆர்.கிருஷ்ணன் ( என். எஸ்.எஸ் வழிகாட்டி) மற்றும் திட்ட அலுவலர்கள் முனைவர். ஆ. அருண்பிரகாஷ் முனைவர் முத்துக்குமார்,

திரு.மணிவேல், திருமதி. மலர்க்கொடி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட தன்னரவல மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் நினைவுபரிசும் பூங்கோத்தும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாய் அனைவரும் குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டனர்.













