• Home
  • தமிழ்நாடு
  • எழுத்தாளர் கி அமுதா செல்வி அவர்கள் எழுதிய பசி கொண்ட இரவு சிறுகதைத் தொகுப்பு  நூல் அறிமுகமும், கலந்துரையாடல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

எழுத்தாளர் கி அமுதா செல்வி அவர்கள் எழுதிய பசி கொண்ட இரவு சிறுகதைத் தொகுப்பு  நூல் அறிமுகமும், கலந்துரையாடல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Email :157

இன்று 11.12.2024 திருச்சிராப்பள்ளி மாமேதை மார்க்ஸ் அலுவலகத்தில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெண்கள் கிளையில் எழுத்தாளர் கி அமுதா செல்வி அவர்கள் எழுதிய பசி கொண்ட இரவு சிறுகதைத் தொகுப்பு  நூல் அறிமுகமும், கலந்துரையாடல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பெண் எழுத்துகள், பெண்கள் சந்திக்கக்கூடிய சமூகப் பிரச்சனைகள் போன்ற செய்திகள்  பகிரப்பட்டது. எழுத்தாளரும் கதை சொல்லிமான கார்த்திகா கவின் குமார் அவர்கள்  நூல் குறித்து விமர்சனம்  மிகச் சிறப்பாக  செய்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பெண்கள் கிளைத் தலைவர் எழுத்தாளர் சீத்தா அவர்கள் நிகழ்வினை  ஒருங்கிணைத்தார்.
கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் அவர்கள் பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு  நிகழ்வின் தொடக்கமாக பாரதியார் பாடல்   பாடினார்.
நிகழ்வின் இறுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  பெண்கள் கிளை செயற்குழு உறுப்பினர் சந்திரா அவர்கள்  பாரதியாரின் பாடலோடு நிறைவு செய்தார்.
மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞர் ரங்கராஜன், கவிஞர் நவஜீவன், கதைசொல்லி மணிமாறன், கவிஞர் சுமித்ரா தேவி, வழக்கறிஞர்கள் வைத்தீஸ்வரி, பூங்கொடி, புவனா, மீரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts