
இன்று திருச்சி திருவானைக்காவல், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி கிளப் ஆஃப், திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி அமைப்பினர் மாணவிகளுக்கு தேவையான Napkin Vending Machine ஐ நன்கொடையாக வழங்கினர்.

65 மாணவிகள் பயிலும் பள்ளிக்கு இது அவசிய தேவையாகும்.
இனிய நண்பர் ராக் சிட்டி ரோட்டரியின் முன்னாள் தலைவர் திரு.திலக் தீனதயாளன் அவர்களுக்கும் தற்போதைய தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைப்பின் பொருளாளர் திரு.பிரபு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

வி.வே.விஸ்வேஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் உறுப்பினர், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி.














