தமிழ்நாடு

மருங்காபுரி வட்டார வள மையம் மருத்துவ முகாம்!

Email :94

மருங்காபுரி வட்டார வள மையம் மருத்துவ முகாம்!
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மருங்காபுரி வட்டார வள மையம் சார்பில் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 0-18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 17.11.2025 அன்று நடைபெற்றது. இம்முகமானது ஒன்றிய பெருந்தலைவர் திரு. பழனியாண்டி அவர்கள் மாவட்ட கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் உயர்திரு வட்டார கல்வி அலுவலர் திருமதி ரெஜி பெஞ்சமின் அவர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) திருமதி சபீனா அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் கண் பார்வை குறைபாடு செவித்திறன் குறைபாடு அறிவுசார் குறைபாடு உடல் இயக்க குறைபாடு என மொத்தம் 169 மாணவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை உதவி உபகரணங்கள் அறுவை சிகிச்சை ஆகியவை தேவைக்கேற்ப பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் சிற்றுண்டி பயணப்படி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
வட்டார வள மைய ஆசிரியரப்பயிற்றுநர்கள் சிறப்பு பயிற்றுநர்கள் இயல் முறை மருத்துவர் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்களும் முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். முகம் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts