தேசிய அளவிலான கராத்தே போட்டியானது, கடந்த 12.06.2025 ஆம் தேதி முதல் 15.06.2025 வரை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றது.
மேற்கண்ட போட்டியில் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அதில் தமிழ்நாடு சார்பாக திருச்சி, திருவெறும்பூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்ற கராத்தே பயிற்சியாளர் அழைத்துச் சென்ற, திருச்சி போலீசார் தனசேகரன் என்பவரது மகளான தனண்யஸ்ரீ என்பவர் வெள்ளி பதக்கத்தையும், திருச்சி BHEL-ல் பணிபுரியும் அரிபாலன் என்பவரது மகள் சுபந்தனா வெண்கலப்பதக்கத்தையும் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றவர் மட்டுமே தேசிய அளவிலான போட்டியில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேசிய கராத்தே போட்டியில் அதிக பதக்கங்களை வென்று தமிழ்நாடு முதலிடத்தை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று 17.06.26-ம் தேதி இரவு 08.30-மணிக்கு இன்டிகோ விமானத்தில் திருச்சி வருகை தர உள்ளனர்.














