திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி மெயின் ரோட்டில் வாகனம் மோதி சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை!
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழ கல்கண்டார் கோட்டையில் இருந்து கீழக்குறிச்சி நத்தமாடிப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு வாகனம் மோதி மின்கம்பம் உடைந்து சாய்ந்து கீழே விழுந்துள்ளது. அந்த மின் கம்பத்திலிருந்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் அந்தப் பகுதி மெயின் ரோடு என்பதால் தெருவிளக்குகள் முழுவதும் எரியவில்லை இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் சென்று வருகின்றனர். பெண்கள் மிகவும் பயத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். உடனடியாக அந்த மின்கம்பத்தை சரி செய்து அந்தப் பகுதிக்கு மின்விநியோகம் கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .













