• Home
  • தமிழ்நாடு
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திருக்குறள் பேரவை கட்டுரைப்போட்டியில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக வெற்றி.
தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திருக்குறள் பேரவை கட்டுரைப்போட்டியில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக வெற்றி.

Email :189

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திருக்குறள் பேரவை கட்டுரைப்போட்டியில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக வெற்றி.
கரூர் திருக்குறள் பேரவையின் 39வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் திருக்குறள் கூறும் அன்பு,அறம்,ஒழுக்கம் ஆகிய தலைப்புகளில் எழுதி மாணவிகள் சிவசுகிதா ரூபியா ,மகிமா வெற்றி பெற்றனர்.

வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் பேரவை சார்பாக கரூர் நகரத்தார் மண்டபத்தில்  தமிழ்ச் செம்மல்  மேலை பழனியப்பன் அவர்கள் பொன்னாடை போர்த்தி,பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். மாணவர்களுக்குச் சான்றிதழ், திருக்குறள் புத்தகம், பேரவையின் ஆண்டு மலர், எழுதுகோல், அழகிய சட்டை துணி, ஐந்து வண்ணப் பெட்டிகள், கிருமி நாசினிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு  பாராட்டுகளைப் பெற்றனர் .மேலும் நம் பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போதைய ஜமால் முகமது கல்லூரியின்  இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவர்  கல்லூரி மாணவன் சா.ஷிப்ல் ஹூசைன் திருக்குறள் பேரவையின் கட்டுரைப்போட்டியில் 6 ஆண்டுகள் வெற்றி பெற்றவர். இவ்வாண்டு ஆண்டு  விழா மலரில் குன்றக்குடி அடிகளாரின் தமிழ் திருக்குறள் பணி பற்றி  எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts