தமிழ்நாடு

பணி நிறைவு பாராட்டு விழா!

Email :304

பணி நிறைவு பாராட்டு விழா!

திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் 32 ஆண்டுகளாக கணித ஆசிரியாக பணிபுரிந்து 31.03.2025 அன்று ஒய்வு பெறும் ஜே.ரவிச்சந்தர் அவர்களின் பணி நிறைவு விழா 28.03.25 நடந்தது. இவர் தெற்கு ரயில்வே பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக ரயில்வேயில் “விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது – 2024” பெற்றவர்.
அதிகமுறை கணித பாடத்தில் 100 சதவித தேர்ச்சி பெற வைத்தவர்.

இவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், ரயில்வே பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் ஜீவானந்தம்,

சண்முகம், பள்ளி நண்பர்கள் சாய்ராம், முருகானந்தம், தலையை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் நினைவு பரிசுகள் வழங்கி, பொன்டை போர்த்தி வாழ்த்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts