திருச்சி மாவட்டத்தில்
புத்தெழுச்சி பெற்றுள்ள
சாரண இயக்கம். ஜனவரி-2025ல் இந்திய அளவிலான சாரண இயக்க பெருந்திரளணி திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்ற பிறகு திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடையே சாரண இயக்கம் பற்றிய தேடுதலும் நாமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டு உள்ளது.

மாநில அமைப்பின் வழிகாட்டுதலின்படி மணப்பாறை சாரண மாவட்டம் சார்பில் இரண்டு நாட்கள் சாரண இயக்கம் பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது – முதல் நாள் மணப்பாறை கார்த்திகேயா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் , மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 80 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் மணிகண்டம் ஒன்றிய்த் தைச் சேர்ந்த 64ஆசிரியர்களும், 70 தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டு சாரண இயக்கம் குறித்து விரிவாக அறிந்து கொண்டு பள்ளிகளில் விரைவாக சாரண இயக்கம் தொடங்க உறுதி அளித்தனர்.

திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி, ) திரு.ரவிச்சந்திரன் தலைமை ஏற்று பயிற்சியை நடத்தினார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள்
ஜெகநாதன், அந்தோணிசாமி, ஜெயா லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சண்முகவேல், நீலகண்டன்
பீட்டர் அந்தோனிசாமி ஆகிய முதன்மை பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கினர்.

மாநில உதவி ஆணையர் மருதநாயகம், மாவட்ட உதவி ஆணையர்
இளம்வழுதி, மாவட்ட செயலர் மில்டன்,
துணைச் செயலர் சார்லஸ் மைக்கேல் ராஜ்,
மாவட்ட அமைப்பு ஆணையர்கள் செல்வக்குமார், மகேஸ்வரி, பொருளர் பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சரஸ்வதி மெட்ரிக் Uள்ளி முதல்வர் சித்ரா பழனிச்சாமி, கார்த்திகேயா பாலிடெக்னிக் முதல்வர் அருள், இளந்தளிர் இல்ல முதல்வர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெருந்திரளணியில் சிறப்பாக பணியாற்றிய சாரண ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மாவட்டக் கல்வி அலுவலர் வழங்கினார்.














