பள்ளி ஆண்டு விழா பரிசு பெற்ற பெற்றோர்கள்!
இன்று 19.03.2025 மணிகண்டம் ஒன்றியம்
இனாம் பெரிய நாயகி சத்திரம்
.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
பெற்றோர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கு பெற்று சிறப்பித்தது தமிழ் வழி பள்ளிகளுக்கு ஊக்கம் தரும் நிகழ்வாக அமைந்திருந்தது.
விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் இராஜஇராஜேஸ்வரி, ஜெயலெட்சுமி, மருதநாயகம் தலைமை ஏற்று நடத்தினர்.
பள்ளியின் சார்பாக ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றும், பரிசும் வழங்கி பாராட்டினார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர் விஸ்வநாதன் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வி கலந்து கொண்டு
மாணவர்களை வாழ்த்தினர்.
ஐந்து மாணவர்கள் முதல் வகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

பெண் குழந்தைகள் கரகாட்டம் ஆடி பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நாக லட்சுமி வரவேற்புரை ஆற்றினார் – இடை நிலை ஆசிரியர்கள் விமலா, விஜயலெட்சமி விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அழகுசுப்பிர மணியன்
ஆறாம் வகுப்பு . இருபது மாணவர்களின் சேர்க்கையை பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி
உறுதி செய்தார்.
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்ககு மட்டுமின்றி இப்பள்ளியில் படிக்கும்
அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும்
தொடர்ந்து அரசுப் பள்ளி ஆதரவு தருவதற்கு நன்றி தெரிவித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பால்ராஜ், அன்பழகன்,
ஒன்றியக் குழு உறுப்பினர்
சுபாசினிசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்.
