• Home
  • தமிழ்நாடு
  • ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் தூய்மை பணியாளர்களுக்கு  விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா!
தமிழ்நாடு

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் தூய்மை பணியாளர்களுக்கு  விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா!

Email :44

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் தூய்மை பணியாளர்களுக்கு  விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா 26/02/2026 வியாழக்கிமையான இன்று மதியம் 02 மணி முதல் 05 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் பகுதியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொன்னாடை மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக 7வது வார்டு கவுன்சிலர் திருமதி ராதா அவர்களும், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் துணை காவல் ஆய்வாளர் திருமதி  T.P.L மதராசி ஸ்டெல்லா அவர்களும்  தலைமை காவல் அதிகாரி சத்யா அவர்களும்,
ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க தலைவர் திரு லோகேஸ்வரன் அவர்களும் ஹோலி கிராஸ் தொண்டு நிறுவனம் சாக்ஸீடு குடும்ப நல ஆலோசகர் திருமதி ரேவதி அவர்களும் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நினைவு பரிசினை கல்லூரியின் சமூகப் பணித்துறை தலைவர் திரு டாக்டர் அருண் பிரகாஷ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து வழங்கினர் . விழாவை ஸ்ரீமத் ஆண்டவன்  கல்லூரியின் முதலாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவி சுபிக்ஷா ராமநாதன் ஒருங்கிணைத்து இறுதியில் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts