• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம்!
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம்!

Email :153

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தமிழரின் சிறு தெய்வ வழிபாடு என்னும் பொருண்மையில் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

முனைவர் பட்ட ஆய்வாளர் திருமிகு அ.ஞா.உமா மகேஸ்வரி வரவேற்புரையாற்றினாா்.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் சே.ச. தலைமை உரையாற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தலைமையுரையில், உலக தாய்மொழி தினமான அன்று தமிழரின் சிறு தெய்வங்கள் குறித்த மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம் நடத்துவது மிகவும் பொருத்தமாக அமைகிறது. நம் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்  தமிழகத்தில் உள்ள பிற கல்லூரி குறிப்பாக அ.து.ம மகளிர் கல்லூரி நாகப்பட்டினம் தியாகராசர் கல்லூரி மதுரை உள்ளிட்ட அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 18 கல்லூரிகளில் இருந்து மாணவர்களை அழைத்து 40 ஆய்வு கட்டுரைகளை பெற்று மாணவர் ஆய்வு கருத்தரங்கம் நடத்துவது மிகச்சிறந்த முன் சான்றாகும் பார்ப்பதாகக் கூறி வாழ்த்தித் தம் தலைமையுரையை நிறைவு செய்தார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் கா. சந்திரசேகரன்  தொடக்கவுரையாற்றினார்.

அவர் சிறப்புரையில், தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியம் தொடங்கி பக்தி இலக்கியம் வரை சிறு தெய்வம் இடம்பெறும் விதத்தை எடுத்துரைத்தார். பக்தி இலக்கியத்தில் திருஞான திருஞான திருநாவுக்கரசர் தனது பாடலில் நலிவுற்ற சிறு தெய்வம் என்று கூறுவதை சுட்டிக்காட்டினார். சிறு தெய்வங்கள் குலதெய்வம் குடி தெய்வம் கன்னி தெய்வம் வீட்டு தெய்வம் என பல வகைகளில் வழிபடப்படுகின்றன. சிறு தெய்வங்கள் ஏன் பெரு தெய்வங்களாக மாறின சிறு தெய்வ வழிபாடுகள் பெருந்தெய்வ வழிபாடுகளாக உருவெடுத்த விதத்தை ஆய்வு நோக்கில் எடுத்துரைத்தார். தமிழாய்வுத்துறைத் தலைவர் ஞா.பெஸ்கி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி பாக்கியசெல்வரதி ஆகியோர் 
முன்னிலை வகித்தனர். முனைவர் ஜோசப் சகாயராஜ் முனைவர் டே வில்சன் ஆகியோர் தலைமையில் கருத்தமர்வுகள் நடைபெற்றன. தாய் தெய்வ வழிபாடு, தமிழிலக்கியமும் ஐயனார் தொன்மமும் உட்பட 39 பொருண்மைகளில்  முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.  முனைவர் பட்ட  ஆய்வாளர் திரு.மு.பிரபாகரன் நன்றியுரை ஆற்றினார்.

முனைவர் பட்ட ஆய்வாளர் மேரி மார்டினா நிகழ்ச்சிகளை நெறியாளரை செய்தார். இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் 153 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts