• Home
  • தமிழ்நாடு
  • தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது நந்தவனம் அறக்கட்டளை வழங்கியது.
தமிழ்நாடு

தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது நந்தவனம் அறக்கட்டளை வழங்கியது.

Email :82

தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது
நந்தவனம் அறக்கட்டளை வழங்கியது.
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில்  நந்தவனம் அறக்கட்டளை மூலம் 23-02-2025 அன்று  தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.
திருச்சி எனர்ஜி ஃபுட் நிறுவனத்தின் உரிமையான அப்தூல் ரகுமான் முன்னிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் என். நல்லுசாமி தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கிச்சிறப்பித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் விருதாளர் பேராசிரியார் தி. நெடுஞ்செழியன் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருச்சி கிழக்கு செயலாளர் ஹாஜி ஏ.ஆர். முகம்மது அபுபக்கர் சித்திக், கவிஞர் நீலபாண்டியான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நந்தவனம் அறக்கட்டளைத் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
பழனி சோ . முத்துமாணிக்கம் , ஆ. செல்லப் பெருமாள் (புதுச்சேரி) சி. இராமு (தேனி) கவிஞர் ஆதிரன் (புதுச்சேரி) கவிநிலா மோகன் (தஞ்சாவூர்) இரஜகை நிலவன் (மும்பை) திருக்குறள் நாவை, சிவம் (மணப்பாறை) காசி. சு. நாகலிங்கம் (தேவக்கோட்டை ) பால இந்திரகுருக்கள் (ஆஸ்திரேலியா ) கோமதி சங்கரன் (மலேசியா) கு. ஞானசேகரன் (தஞ்சாவூர் ஆகியோருக்கு தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது.
சமூக சேவகர் சங்கர் மற்றும் அப்தூல் ரகுமான் ஆகியோருக்கு வெற்றித் தமிழன் விருது வழங்கப்பட்டது. கவிஞர் ஜனனி அந்தோனி ராஜ் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா. தனபால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts