தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவெறும்பூர் கிளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் கிளையின் “முதல் துளிர் இல்லம்” தொடக்கவிழா!

இன்று 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு திருவெறும்பூர் மலைக்கோவில் எதிரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் இருக்கின்ற குழந்தைகளை ஒருங்கிணைத்து, கிளைத் தலைவர் திரு.து.காந்தி அவர்கள் தலைமையில் சர்.சி.வி ராமன் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது.

கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு.மகாலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர்.த.திருநாவுக்கரசு அவர்கள் துளிர் இல்லத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


சர்.சி.வி ராமன் துளிர் இல்ல,
தலைவர் : பி.ராம் சரண்
செயலாளர் : ப.டானியா ஸ்ரீ
பொருளாளர் : பா.பரணி
வழிகாட்டி ஆசிரியர் : ப.வர்ஷினி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தி பேசினார். கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு.காவியா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்வை கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு.காளீஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்தார். திருவெறும்பூர் கிளைச் செயலாளர் திரு.க.பகுத்தறிவன், பெல் கிளைச் செயலாளர் திரு.திருநாவுக்கரசு உள்ளிட்ட 20 குழந்தைகள் கலந்து கொண்டனர்.














