தனலட்சுமி பாஸ்கரன் சிறுகதை நூல் வெளியீடு!
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் தனலட்சுமி பாஸ்கரனின் செம்மை மறந்தாரடி கிளியே! சிறுகதை நூல் வெளியிட்டு விழா 22 – 2 – 2025 அன்று மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சிறப்புத் தலைவர் செளமா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் சங்கரி சந்தானம், சூரியா சுப்பிரமணியம், யோகா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை விசித்தனர். திருச்சிமாவட்ட எழுத்தாளர் சங்கம் பொதுச்செயலாளர் வை. ஜவஹர் ஆறுமும் அனைவரையும் வரவேற்க தலைவர் த. இந்திரஜித் தாய் மொழி தின உரை நிகழ்த்தினார். வட்டாரக் கல்வி அலுவலர் இரா. ஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார், மத்திய கலால் சுங்கத்துரை கண்காணிப்பாளர் (ஓய்வு) சி. பு . பாஸ்கரன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சர் பெ. உதயகுமார்.
பத்மஸ்ரீ மா . சுப்ராமன், கவிஞர் வீ.கோவிந்தசாமி, எழுத்தாளர் ஜனனி அந்தோனி ராஜ், பிலோமினா ஸ்டெல்லா, ஆகியோர் வாழ்த்துரை வழங்க தலைட்சுமி பாஸ்கரன் ஏற்புரையாற்றினார், நிறைவாக நந்தவனம் சந்திரசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார். கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.