
தமிழ் கலாச்சார விழா: பொங்கல் விழாவின் கல்வி முக்கியத்துவம்.
ஆக்கம்:
எஸ் சிவக்குமார், முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
Mob..6383690730.

திருவள்ளூர் மாவட்டம் வள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று ஆசிரியர்கள் பெற்றோர்கள், குழந்தைகள், மற்றும் வனகாவலர்களும் இணைந்து தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.
இவ்விழாவின் முக்கிய நோக்கம், குழந்தைகளிடத்தில் தமிழ் கலாச்சாரத்தின் பண்புகளை அறிமுகப்படுத்துவதும், விவசாய அறிவை வளர்ப்பதுமாகும்.

விழாவின் தொடக்க நிகழ்வாக, சர்க்கரை பொங்கல், மண் அடுப்பு அமைத்து பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரிக்கப்பட்டது.
இதன்மூலம் குழந்தைகள் பழங்கால வாழ்வுமுறைகள், பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் பற்றிய அறிவை அறிவதற்கு உதவின.
விழாவின் சிறப்பம்சமாக, குழந்தைகள் குழுவாக இணைந்து கோலாட்ட பாட்டுப் பாடி ஆடினார்கள் .
பாடலின் மூலம் தமிழ் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் மக்களுடன் ஒருமித்துப் பணிபுரிய வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
பொங்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு, பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
முடிவில், தமிழ் கலாச்சார விழா, கல்வி மட்டுமின்றி வாழ்க்கைத் திறன்களையும் உயர்த்துகிறது என்பதை வள்ளுவர் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் செயல் மூலம் நிரூபித்துள்ளார்கள்.
நன்றி.
10.01.2025












