
இன்று 10/01/2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொங்கல் கொண்டாட்டம் தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜி. ஜெயச்சந்திரன், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் பவா செல்லதுரை மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் திரு P. S. அமல்ராஜ், தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் திரு V. கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள் திரு பாலு, திரு முருகன், திரு மோகன கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞருடன் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு P. V. வெங்கட் உடன் இருந்தார்.

நிகழ்ச்சியில் கரகாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி உரையாற்றிய போது நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வருவது வரவேற்கத்தக்கது. என்று குறிப்பிட்டார் இதில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
