தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறப்பு மாவட்டச் செயற்குழு கூட்டம், 10.01.2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு திருச்சி இந்தியன் வங்கி காலனி அருகில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் திரு.ஜான்சன் பிரான்சிஸ் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் திரு.சிவ.வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சலி தீர்மானம் மற்றும் பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நடைபெற்ற பணிகள் முன்வைக்கப்பட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான பணிகளாக கீழ்க்கண்டவை திட்டமிடப்பட்டது. துளிர் திறனறிதல் தேர்வு (தொடக்க நிலை)
• குழந்தைகள் அறிவியல் மாநாடு – மாவட்ட மாநாடு,
• உறுப்பினர் பதிவு
• ஒன்றிய/ கிளை ஆண்டுக் கூட்டம்
• மாவட்ட பொதுக்குழு கூட்டம்
• துளிர் இல்லம், கலந்து கொண்ட செயற்குழு உறுப்பினர்களின் துளிர் திறனறிதல் தேர்வு பதிவிற்கான முயற்சியின் தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உறுப்பினர் பதிவினை உற்சாகத்துடன் செய்து தருவதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.மாணிக்கத்தாய் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) அவர்கள் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மாநாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மாவட்ட பணிகளைப் பாராட்டி நிறைவுரை ஆற்றினார். ஒன்றிய/ கிளைகளில் துளிர் திறனறிதல் தேர்வு பணிகளை சிறப்பாக செய்த ஒன்றிய/ கிளை நண்பர்களுக்கும், அறிவியல் இயக்க மாவட்ட முன்னோடிகளில் ஒருவரான அறிவியல் தாத்தா திரு.எஸ்.நடராசன் அவர்களுக்கும், துளிர் திறனறிதல் தேர்வை சிறப்பாக ஒருங்கிணைத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.க.பகுத்தறிவன் அவர்களுக்கும், ஆற்றல் மன்ற நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.அருண்விவேக் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவுப் புத்தகம் வழங்கப்பட்டது. நிறைவாக தா.பேட்டை அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.சின்னம்மா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தை மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

சிறப்பு செய்தியாளர்,
இலால்குடி,
க.ரெங்கநாதன்
Cell : 7540018725.