• Home
  • தமிழ்நாடு
  • நிறைவு நாளான இன்று 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு  “தீதின்றி வந்த பொருள்” என்ற தலைப்பில் திருக்குறள் சு. முருகானந்தம் மற்றும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற தலைப்பில் முனைவர் க. பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி ஆகியோர் உரையாற்றிய கருத்தரங்கம் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

நிறைவு நாளான இன்று 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு  “தீதின்றி வந்த பொருள்” என்ற தலைப்பில் திருக்குறள் சு. முருகானந்தம் மற்றும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற தலைப்பில் முனைவர் க. பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி ஆகியோர் உரையாற்றிய கருத்தரங்கம் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

Email :220

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவினை கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் டிசம்பர் 23.12.2024 முதல் டிசம்பர் 31.12.2024 முடிய புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, வினாடி – வினா ஆகிய போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றது.

நிறைவு நாளான இன்று 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு  “தீதின்றி வந்த பொருள்” என்ற தலைப்பில் திருக்குறள் சு. முருகானந்தம் மற்றும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற தலைப்பில் முனைவர் க. பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி ஆகியோர் உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வாசகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார் துவக்கி வைத்தார்.

வாசகர் வட்டத் தலைவர் வீ . கோவிந்தசாமி, கவிஞர் நந்தலாலா, சுந்தர்ராஜ், வாசகர் வட்டத் துணைத் தலைவர் கி. நன்மாறன், வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் செ. அருணாசலம் உள்ளிட்ட வாசகர் வட்ட நிர்வாகிகள், நூலகர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். நிறைவாக மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் சு. தனலெட்சுமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts