இன்று 24.02.2026 திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய *வாசகர் வட்டம்* நிகழ்ச்சி சிறப்பான முறையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இன்று ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் *முனைவர்.திரு.பிச்சைமணி* அவர்கள் நினைத்ததும் மறந்ததும் எனும் தலைப்பில் பேசயிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நிகழ்ச்சிக்கு வர இயலாததால் அதே தலைப்பில் இன்று நானே மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினேன். எப்போதும் unplanned programs will get success and satisfaction எனும் கூற்றின்படி

இன்று நான் தயார் செய்யாமல் பேசிய உரை மிக சிறப்பாக அமைந்தது மன நிறைவை தந்தது.வரவேற்புரையாற்றிய கல்லூரி கலை புல முதன்மையர் நூலகத்துறை தலைவர் *முனைவர்.ச.லெஷ்மி* அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய நூலகத்துறை உதவி பேராசிரியர் *முனைவர்.ஜவஹர்பாபு* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
*வி.வே.விஸ்வேஸ்வரன், திருஆனைக்கா*














