• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்! இன்று திருச்சி 22 அரசு கல்லூரியில் மத்திய அரசின்  பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை 2025 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி மதியம் கல்லூரி வாயில் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் முனைவர் பி டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்! இன்று திருச்சி 22 அரசு கல்லூரியில் மத்திய அரசின்  பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை 2025 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி மதியம் கல்லூரி வாயில் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் முனைவர் பி டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

Email :109

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்!
இன்று திருச்சி 22 அரசு கல்லூரியில் மத்திய அரசின்  பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை 2025 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி  மதியம் 12.15 மணியளவில் கல்லூரி வாயில் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் முனைவர் பி டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

இதில் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 80 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வார்பாட்டத்தின் முக்கிய கருது பொருளாக கீழ் கண்ட பாதக அம்சங்களாக தெரிவிக்கப்பட்டவை. பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு நெறிமுறைகள் 2025 கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாக மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த உயர்கல்விச் சூழலையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

1. தேர்வு நிலை உதவி பேராசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு முனைவர் பட்டத்தினை கட்டாயமாக்குகிறது.

2. பதவி உயர்வு பெறுவதற்கு, கல்லூரி ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய முடியாத 9 செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது.

3. ஆண்டின் எந்த தேதியில் பதவி உயர்வு பெற்றாலும், வருடத்தில் சனவரி மற்றும் ஜூன் மாதத்தில் மட்டுமே பணி மேம்பாடு வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளது.

4. இணைய வழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆசிரியர் பணியிடங்களை ஒழித்துக் கட்டுவதற்கான ஏற்பாடு உள்ளது.

5.  ஒருவர் தாம் பயின்ற இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுக்கு சம்பந்தம் இல்லாத பிற துறைகளில் முனைவர் பட்டம் பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கும் பரிந்துரை செய்துள்ளது.

6.தனியார் நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறது.

7. இணைய வழி பாடத்திட்டங்கள் உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

8.ஒப்பந்த முறையில் ஆசிரியர் பணி நியமனங்களை ஊக்குவிக்கிறது.

9.தனியாரிடமிருநது முதலீடு பெற்று, புதிய Start Up உருவாக்க வேண்டும் என்பதை, ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிற்கு கட்டாயமாக்கியுள்ளது.

10. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், தொழில் நிறுவங்களைச் சார்ந்தவர்களை நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ அமல்படுத்துவதன் பொருட்டு,  டிசம்பர் 4, 2024 அன்று வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு நெறிமுறைகள், மாணவர் சேர்க்கையில், பாடத்திட்டஙகளில் விரும்பத்தகாத பல மாற்றங்களை செய்திட பரிந்துரை செய்துள்ளது.

அவற்றில் சில,

1.மேல்நிலைக் கல்வியில் படித்த பாடப்பிரிவிவை அடிப்படையாக கொள்ளாமல் கல்லூரியில் இள நிலை பாடப்பிரிவில் சேரலாம்.

இளநிலை பாடப்பிரிவில் பயிலாத பாடப்பிரிவை  முதுநிலை பாடப்பிரிவில் தேர்வு செய்யலாம் என பரிந்துரைத்து உயர்கல்வியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

2. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு  நுழைவுத் தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும் என பரிநதுரைத்து ஏழை, எளிய மாணவர்களை உயர்கல்வி பெறுவதில் இருந்து தடுப்பது.

3. ஆண்டுக்கு இரண்டுமுறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட வலியுறுத்துவதன் மூலம், தனியார் கல்வி வியாபாரத்திற்கு ஆதரவு.

4. இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் முதன்மைப்பாடத்திற்கு ( core subject), 50 சதவீதம் கிரெடிட் மட்டுமே. மீதம் உள்ள 50 சதவீதம் பல்துறைப்பாடங்கள், திறமைசார் பாடங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு வழங்கப்பட்டு, ஒரு மாணவர் ஒரு பாடப்பிரிவில் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான அறிவாற்றலை பெற தடுப்பது.
.
5. இளநிலை பாடப்பிரிவுகளுக்கான காலத்தை நான்கு ஆண்டுகளாக உயர்த்துவது,  முதல் ஆண்டு மட்டும் படித்து வெளியேறலாம், இரண்டாம் ஆண்டுவரை மட்டும் படித்தும் வெளியேறலாம், மூன்று ஆண்டுகள் படித்தும் வெளியேறலாம், ஒவ்வொரு நிலையிலும் அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும் என பரிந்துரைத்து, இடைநிற்றலை ஊக்கப்படுத்துவதற்கு வழி வகை செய்கிறது.

6. மாணவர்கள் இணைய வழியில் கல்வி பெறுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது.

இவை தவிர, மாநிலத்தின் நிதி உதவியில் தொடங்கப்பட்டு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் மாநிலப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிபபதற்கான அதிகாரங்களை முழுவதுமாக பல்கலைக்கழக மானியக்குழு எடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக,  கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதற்குரிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கூறிய பரிந்துரைகளை அமல்படுத்தாத பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்ற பரிந்துரை மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். மேற்கண்ட பரிந்துரைகள் எல்லாம் அமலாக்கத்திற்கு வரும் என்றால் ஆசிரியர் மாணவர் சமூகம் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த வாயில் முழக்க போரட்டத்தில் கிளைத் தலைவர் முனைவர் வெ. செல்வராணி கிளைச் செயலாளர் முனைவர் வை இராமன் பொருளர் பி. அன்பழகன் துணைத் தலைவர்  M. அறிவழகன் இணைச் செயலாளர் S. ஜெயந்தி மாலா  முனைவர். தி. ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts