• Home
  • தமிழ்நாடு
  • மூத்த குடிமக்களுக்காக “இன்றைய அக்கறை – நாளைய நல்வாழ்வு” நிகழ்ச்சி, திருச்சி, 23.09.2026.
தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்காக “இன்றைய அக்கறை – நாளைய நல்வாழ்வு” நிகழ்ச்சி, திருச்சி, 23.09.2026.

Email :30

மூத்த குடிமக்களுக்காக “இன்றைய அக்கறை – நாளைய நல்வாழ்வு” நிகழ்ச்சி
திருச்சி, 23.09.2026.
திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்களுக்கான மாநில செயல்திட்டம், State Action Plan for Senior Citizens (SAPSrC) கீழ், “Caring Today for a Kinder Tomorrow” என்ற கருத்தை மையமாகக் கொண்டு பல்வேறு நலவாழ்வு நிகழ்ச்சிகள் திருச்சியில் நடைபெற்றன.

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி, சமூகப்பணித்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமையேற்று வழிகாட்டினார்.

நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலை மற்றும் கைவினைப் பயிற்சி, பாரம்பரிய உணவு தயாரிப்பு, பாரம்பரிய விளையாட்டுகள், இசை மற்றும் நடனம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலை மற்றும் கைவினைப் பயிற்சியை திருச்சியைச் சேர்ந்த தொழில்முனைவோர் S. சுபானி வழங்கினார். பாரம்பரிய உணவு தயாரிப்பு நிகழ்ச்சியை ஜெயமாதா முதியோர் இல்லத்தைச் சேர்ந்த S. கமலா நடத்தினார். பாரம்பரிய விளையாட்டுகள் நிகழ்ச்சியை பாவை அறக்கட்டளை, பொன்மலைப்பட்டி கண்காணிப்பாளர் திரு. தினேஷ்குமார் ஒருங்கிணைத்தார். இசை மற்றும் நடன நிகழ்ச்சியை AICUF Animation-ஐச் சேர்ந்த திரு. ரஞ்சித் ராய் வழங்கினார்.

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியை Voice Trust, மாம்பழச்சாலையைச் சேர்ந்த திரு. K. சின்னராசு ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் குழுத் தலைவர் டாக்டர் S. ராமலிங்கம், கல்லூரிக் குழுச் செயலாளர் திரு. K. ராமகிருஷ்ணன், Director (SF) டாக்டர் M. கல்யாணசுந்தரம், கல்லூரி முதல்வர் டாக்டர் E. ரவிச்சந்திரன், சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் சிஜி மேரி கோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூத்த குடிமக்களின் உடல், மன, சமூக நலனை மேம்படுத்துதல், அவர்களின் திறமைகளை ஊக்குவித்தல் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts