திருச்சிராப்பள்ளி வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு ஐயர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 2ஆம் தேதி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு ஐயர் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரகனேரி நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் அவர்கள் இன்று (02.04.2025) மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வா.வே.சு ஐயர் நினைவு இல்லத்தையும் அதில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

தொடர்ந்து கிளை நூலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயின்று வருபவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் ஏதும் தேவை இருப்பின் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் நீங்கள் நல்ல முறையில் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் த அருள்,மாவட்ட நூலக அலுவலர் திரா. சரவணகுமார்,கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல், முருகன் மாநகராட்சி உதவியாளர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி தொடர்பு அலுவலர் மு. சுதாகர், கிளை நூலகர் செந்தில்குமார், வாசகர் வட்ட தலைவர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













