• Home
  • தமிழ்நாடு
  • திருநெல்வேலி மாவட்டத்தில் “சுவற்றில் தொங்கும் கரும்பலகை திட்டம்”.
தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டத்தில் “சுவற்றில் தொங்கும் கரும்பலகை திட்டம்”.

Email :15

திருநெல்வேலி மாவட்டத்தில் “சுவற்றில் தொங்கும் கரும்பலகை திட்டம்”

by
எஸ் சிவக்குமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம்.
கைபேசி எண்: 6383690730

அறிமுகம்:
திருநெல்வேலி மாவட்டம், கல்வி முன்னேற்றத்தில் தொடர்ந்து சிறந்து விளங்கும் ஒரு மாவட்டமாக திகழ்கிறது.

இங்கு சுய கற்றல் மூலம் அறிமுகமான “சுவற்றில் தொங்கும் கரும்பலகை” திட்டம் குழந்தைகளின் சுய கற்றல் திறனை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது.

குழந்தைகள் படிக்க வீடுகள் தோறும் சுவற்றில் கரும்பலகை தொங்க வைக்கப்படுகிறது. இது அவர்களின் மொழித்திறன் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகிறது.


இந்த திட்டத்தின் உளவியல் அடிப்படையையும், அதன் செயல்திறனையும் அறிய உளவியல் அறிஞர்களின் கோட்பாடுகளை பயன்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது.

கரும்பலகை மற்றும் பி.எப். ஸ்கின்னரின் கோட்பாடு(P.F.Skinner),

பி.எப். ஸ்கின்னர் வலியுறுத்தலின் (Reinforcement) மூலம் கற்றல் திறன் மேம்படும் என்று கூறியுள்ளார். கரும்பலகையை பயன்படுத்தி குழந்தைகள் எழுதும் செயல்பாடுகள் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் பாராட்டுவதால், அவர்கள் தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் அடைகிறார்கள். உதாரணமாக, “நன்றாக எழுதியிருக்கிறாய்” என்ற ஒரு சின்ன பாராட்டும் குழந்தையின் முயற்சியை அதிகரிக்கக் கூடியது. இதன் மூலம் தன்னார்வமான கற்றல் நடக்கிறது, மேலும் கவனமும் மனஅமைதியும் வளர்க்கப்படுகிறது.

ஆல்வ்ட் பாண்டுராவின் சமூக கற்றல் கோட்பாடு(Albert Pandura),

ஆல்வ்ட் பாண்டுரா கூறியது போல், குழந்தைகள் தங்கள் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள். பெற்றோர்கள் கரும்பலகையில் எழுதி, குழந்தைகளை ஊக்குவிக்கும் போது, அவர்கள் பெற்றோரின் செயல்களை பின்பற்றுகிறார்கள். இது, பெற்றோர்களின் செயல்பாடு குழந்தைகளின் கற்றல் முறைக்கு நேரடியாக நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகிறது .

பாவ்லொவின் கிளாசிக்கல் கண்டிஷனிங்
(Pavlow-ClassicalConditioning),

பாவ்லொவின் கருத்தின்படி, கற்றல் ஒரு உணர்ச்சி சார்ந்த அனுபவமாக இருக்க வேண்டும். கரும்பலகையை பயன்படுத்துவது குழந்தைகளுக்கு விளையாட்டுத்
தன்மையையும் புதுமையையும் உருவாக்குகிறது. இதனால், கல்வி என்பது கட்டாயமான ஒன்றாக இல்லாமல், மகிழ்ச்சியான செயலாக மாறுகிறது. இது, குழந்தைகளுக்கு நல்ல கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.

ஜான் ட்யூவியின் செயல்முறைவியல்(John Dewey),

ஜான் ட்யூவியின் கோட்பாடு, அனுபவத்தின் வழியாக சிறந்த கற்றல் நிகழ்வதாக வலியுறுத்துகிறது. கரும்பலகையில் குழந்தைகள் எழுதி பழகுவதன் மூலம்  (hands-on) கற்றல் முறையை சிறப்பாக அமைகிறது. இது குழந்தைகளின் நுண்ணறிவை மற்றும் சுய சிந்தனையை வளர்க்கிறது.

கரும்பலகை திட்டத்தின் பயன்கள்:

சுய கற்றல்: கரும்பலகை குழந்தைகளை தாங்களே எழுதி சிந்திக்க தூண்டுகிறது.

மொழி திறன் மேம்பாடு: தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக எழுதும் திறன் உருவாகிறது.

கற்றல் ஆர்வம்: தினசரி பழக்கத்தால் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வம் அதிகரிக்கிறது.

மற்றவர்களின் பங்கு: பெற்றோர்கள் வழங்கும் உற்சாகம், குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்குகிறது.


முடிவுரை:

“சுவற்றில் தொங்கும் கரும்பலகை” திட்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஒரு முக்கிய சாதனையாக விளங்குகிறது. உளவியல் அறிஞர்களின் கோட்பாடுகளின் அடிப்படையில், இது குழந்தைகளின் கற்றல் முறையை மாற்றியமைக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் குழந்தைகள் ஆகிய மூவரும் இணைந்து செயல்படும்போது, சுய கற்றல் ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த திட்டம், மற்ற மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts