
பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியில் உலக புற்றுநோய்தினம் அனுசரிக்கப்பட்டது.
உலக புற்றுநோய் தினம் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் 04.02.25 அன்று காலை 11.00 மணிக்கு அனுசரிக்கப்பட்டது.
பொன்மலை ரயில்வே முதன்மை மருத்துவர் அதிகாரி டாக்டர்.விஜயலட்சமி ஆர் நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

உடல்நலம் மற்றும் குடும்பநலன் அலுவலர் ஸ்ரீ.டி.ரவி (CC/H&FW/RH/GOC ) வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு ரயில்வே மருத்துவமனை சீனியர் கோட்ட மருத்துவ அதிகாரி,தோல் டாக்டர். தெரேசா வளர்மதி Dr.A.Therasal valarmathi (Sr.DMO/Dermatologist/RH/GOC) அவர்கள் 1)புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் பற்றி விரிவுரை வழங்கினார்கள் 2) பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் சிகிச்சையை விளக்கினார் 3) உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி பற்றி பேசினார்.

கோட்ட மருத்துவ அதிகாரி டாக்டர்.குமாரி (DMO/O&G/RH/GOC) புற்றுநோய் மற்றும் பெண்களுக்கான தடுப்பூசிகள் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள்,அனைத்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


