உலக பெண்கள் தினம்-2025 முன்னிட்டு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) பணிபுரியும் பகுதிகளில் உள்ள சுயஉதவி குழு பெண்கள் அனைவரையும் புதுதெரு,காஜாபேட்டை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் ஒருங்கிணைக்கபட்டு சிறப்பாக செயல்பட்ட சுயஉதவி குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை கௌரவ படுத்தும் வகையில் சான்றிதல் வழங்கி சிறப்பிக்கபட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமைஉரை ஆற்ற வருகைதந்த திருமிகு.பேராசிரியர் முனைவர்.ந.மணிமேகலை இயக்குநர்.மகளிர் மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் புதுடெல்லி. அவர்கள் பேசுகையில் பெண்கள் கடந்து வந்த பாதை மற்றும் பெண்சிசு கொலை, பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற உள்ள வழிவகைகள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். பின்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமிகு.சுகந்த பிரிசில்லா முதுநிலை ஆலோசகர். IIHS அவர்கள் பெண்கள் வலிமையக்கம் பற்றி பேசினார்.

மேலும் 50 வார்டு மாமன்ற உறுப்பினர் திருமிகு.ரிஸ்வானாஹமீத் அவர்கள் பெண்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் வெளியே வந்து அவர் அவர் தனிதிறமைகளை கண்டறிந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியின் முன்னதாக திருமிகு.ஜெ.ஜெயபேபி ஆலோசகர் PDI அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் திருமிகு.ரம்யா கணக்காளர்.PDI அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

