• Home
  • தமிழ்நாடு
  • ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப்பெண் குழந்தைகள் தினவிழா!
தமிழ்நாடு

ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப்பெண் குழந்தைகள் தினவிழா!

Email :195

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப்பெண் குழந்தைகள் தினவிழா.  தமிழக அரசின் உத்தரவின் படி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியப் பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை ஏற்று, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1966 ஜனவரி 24 ஆம் நாள் பெண் பிரதமராக பதவி ஏற்ற நாளை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது பற்றியும், மாணவர் மனசுப்பெட்டி, மாணவர்களுடைய குறைகளைப் போக்கும் அலைபேசி எண்களான 1098 ,14417 ஆகிய உதவி எண்கள் பற்றி எடுத்துரைத்தார். ஆசிரியை புவனேஸ்வரி  அவர்கள் பெண் கல்வியின் முக்கியத்துவம், இணையவழிக் குற்றங்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பெண் குழந்தைகள் சுய கட்டுப்பாடு,சுய ஒழுக்கம், சுயமரியாதையோடு சமூகத்தில் செயல்படுவது, போக்சோ விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.மேலும் ஆசிரியர்கள் ஷகிலாபானு, ராபியா பஸ்ரி,ரொகையாபீவி,கவிதா உஷா நந்தினி,கிருஷ்ணவேணி,ஜோதிமணி,கதிரேசன், நாகராஜன், ஷஃபான்தஸ்லிம் ஆகியவர்கள் பங்கேற்றனர். மகிழ்முற்றக்குழு  செயலர் சகாயவில்சன் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். மேலும் நிகழ்வின் முடிவில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புக் குழு கூட்டமும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts