• Home
  • தமிழ்நாடு
  • “தேசிய நூலக வார விழா” இன்று 14.11.24 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இனிதே தொடங்கியது
தமிழ்நாடு

“தேசிய நூலக வார விழா” இன்று 14.11.24 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இனிதே தொடங்கியது

Email :96

“தேசிய நூலக வார விழா” 

நவம்பர் 14 முதல் 20 முடிய நடைபெற உள்ள 57ஆவது தேசிய நூலக வார விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன்

இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இன்று 14.11.2024 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு “அறிவுப்பூங்கா” என்ற தலைப்பில் ஓவியம் வரையும் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். மேலும் வருகின்ற,

16.11.2024 சனிக்கிழமை காலை 11 மணிக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் “ஓரங்க நாடகப் போட்டி” மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும், போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும்.

16.11.2024 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு “இல்லற மேன்மைக்கு அதிக சவால்களை சந்திப்போர் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் “விவாத அரங்கு” மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். இதில் ஆண் பெண் வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

17.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு “படம் பார்த்து கதை எழுதும் போட்டி” காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் பொது நூலகங்களில் நடைபெறும். ஓட்டி துவங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் படம் பார்வைக்கு வைக்கப்படும். படம் பார்வைக்கு வைக்கப்பட்ட நேரத்தில் இருந்து 1/2 மணி நேரத்திற்குள் வாசகர்கள் தம் கதையை பக்கத்திற்கு 20 வரிகளுக்கு குறையாமல், நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஒப்படைக்க வேண்டும். ஊட்டியில் பங்கு கொள்பவர்கள் அருகாமையில் உள்ள பொது நூலகத்திற்கு சென்று போட்டியில் கலந்து கொள்ளலாம்.

18.11.2024 திங்கட்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி மகளிர் சிறையில் இல்ல வாசிகள் பங்குபெறும் “படித்ததை பகிர்வோம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். இல்ல வாசிகள் சிறையில் இயங்கும் நூலகத்தைப் பயன்படுத்தி தாங்கள் படித்த புத்தகத்திலிருந்து தமக்கு பிடித்த கருத்துக்களை எடுத்துரைப்பார்கள்.

19.11.2024 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு “மாபெரும் வினாடி வினா” போட்டி நடைபெறும். இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வினாடி வினா நிகழ்ச்சியை NR IAS அகாடமி இயக்குனர் திரு. என். ஆர். விஜயாலயன் நடத்தவுள்ளார்.

20.11.2024 புதன்கிழமை காலை 11 மணிக்கு வாசகர்களுக்கு “வாசிப்பு என்ன செய்யும்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதையை 5 நிமிடங்களுக்குள் வாசிக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நிறைவு விழாவில் வழங்கப்படும். அனைத்து நிகழ்வுகளிலும் திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட நூலக அலுவலர்,

திருச்சிராப்பள்ளி.

94435 32633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts