
திரைக் கலைஞர்கள் கிளை யின் ஆங்கில ஆண்டு நிறைவுச் சந்திப்பு. குழந்தைகள் தினம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு வரவேற்பு தொடக்கம் என முப்பெரும் கொண்டாட்டம். கிளைச் செயலர் நடன வடிவமைப்பாளர் & TDS திருவெறும்பூர் கிளை பொறுப்பாளர் லாரன்ஸ் லூக், நடனக் கலைஞர்கள் சத்யா மிட்டோ , பரத், திலீப், பிரியா, டுலைய்ட் டான்ஸ் ஸ்டுடியோ நடனப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு சத்யா மிட்டோ தலைமை தாங்க, குழந்தைகள் நடனமாடி வரவேற்க, கிளைப் பொறுப்பாளரும் மாவட்டத் தலைவருமான சிவ.வெங்கடேஷ் சிறப்புரையாற்ற முடிவில் செயலாளர் லாரன்ஸ் லூக் நன்றி நவின்றார்.













