• Home
  • தமிழ்நாடு
  • வடக்கு பாகனூர் பகுதியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வளர் இளம் பெண்களுக்கான ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு மட்டும் ஊட்டச்சத்து வழங்குதல் நிகழ்ச்சி !
தமிழ்நாடு

வடக்கு பாகனூர் பகுதியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வளர் இளம் பெண்களுக்கான ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு மட்டும் ஊட்டச்சத்து வழங்குதல் நிகழ்ச்சி !

Email :103

இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள வடக்கு பாகனூர் பகுதியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வளர் இளம் பெண்களுக்கான ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு மட்டும் ஊட்டச்சத்து வழங்குதல் நிகழ்ச்சி இன்று வடக்கு பாகனூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாக திரு ராபின்சன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வழங்கினார் அதனை தொடர்ந்து திருமதி ஜான் மேரி ஐ சி டி சி கவுன்சிலர் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அவர்கள் வளர் இளம் பருவத்தினர் நாம் அரசு தரக்கூடிய நலத்திட்டங்கள் பற்றியும் நம் எவ்வாறு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் உள்ள பயன்கள் பற்றியும் அன்றாடம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் குறிப்பாக அரசு வழங்கக்கூடிய ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்க மாத்திரை பற்றியும் அரசு வழங்கக்கூடிய இரும்பு சத்து மாத்திரையும் நாம் எதற்காக எடுக்க வேண்டும் அதன் பயன் என்ன அதன் வழியாக நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை பற்றி எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் திரு கோபி அவர்கள் குழந்தைகளிடம் நாம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் மற்றும் உடல் உழைப்பு செய்ய வேண்டும் அதற்கான வேலைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதை பற்றியும் எவ்வாறு ஊட்டச்சத்தை உட்கொள்ள வேண்டும் எந்தெந்த பகுதியில் எந்தெந்த ஊட்டச்சத்து இருக்கிறது.

என்பதை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார் அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிதுணை ஆரம்ப சுகாதாரநிலைய செவிலியர் அவர்கள் நன்றி உரை கூறினார் இறுதியாக 25 வளர் இளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்தானது வழங்கப்பட்டது இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் கருப்பு கொண்டை கடலை,கருப்பு உணர்ச்சி திராட்சை,சிகப்பு அவல்,பச்சை நிலக்கடலை,நாட்டு சக்கரை,ஆகிய ஐந்து பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் திரு ராபின்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts