• Home
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமாதா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
    திருச்சி-1,, கருமண்டபம், ஆரோக்கியமாதா பள்ளியில் இன்று 11.01.2025 பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

ஆரோக்கியமாதா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
திருச்சி-1,, கருமண்டபம், ஆரோக்கியமாதா பள்ளியில் இன்று 11.01.2025 பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Email :140

ஆரோக்கியமாதா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
திருச்சி-1,, கருமண்டபம், ஆரோக்கியமாதா பள்ளியில் இன்று 11.01.2025 பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் சிறப்பு விருந்தினராக சந்தான ஆங்கில பள்ளியின் தமிழாசிரியர், பட்டிமன்ற பேச்சாளர் மு.ஜெயலட்சுமி வெங்கடேசன் அவர்கள் பங்கேற்க பள்ளியின் தாளாளர் அருட்தந்தை. ஜெயராஜ், முதல்வர். ஜஸ்டின் துரைராஜ்,

துணை தலைமையாசிரியர் திருமதி. ரோஸ்லின் சித்ரா ஆகியோர் முன்னிலையில் பொங்கல் விழா இனிதே தொடங்கியது. மாணாக்கர் கவிதை கூறுதல், பாடலுடன் இசைக்கருவிகள் மீட்டல், நடனம்,  பொங்கல் உரை என சிறப்பாக தங்கள் திறமையைகளை வெளிப்படுத்தினர்.

தமிழாசிரியர் திருமதி எஸ்.செசிலி அவர்கள் இலக்கியங்கள் கூறும் பொங்கல் விழா மற்றும் தற்பொழுது விவசாய நிலைப்பற்றி உரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்  மாணாக்கரின் நட்பு, வாழ்வின் முன்னேற்றம் பற்றி கதையுடன் கூறியமை சிறப்பாக இருந்தது.

பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அவர்கள் விவசாயத்தின் பெருமையையும், தான் சிறுவயதில் தன் இல்லத்தில் விவசாய நிலத்தில் செய்த வேலைகளையும் கூறி மாணாக்கரை சிந்திக்க வைத்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்திய தமிழாசிரியர்கள் அனைவரையும் பாராட்டினார். பின்பு போட்டியில் பங்குப்பெற்று வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணாக்கர்கள், பெற்றோர்கள் அனைவர்க்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பை அன்பை வெளிப்படுத்தினர்.

மூத்த தமிழாசிரியர் ஜஸ்டினாள் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க,     ஆசிரியர் திரு. ஜார்ஜ் வரவேற்புரை வழங்க, ஆசிரியர் திருமதி. டெய்சி அவர்கள் தொகுத்து வழங்க, ஆசிரியர் திருமதி மரியசெல்வி அவர்கள் நன்றியுரை நாவில, தமிழாசிரியர் திருமதி சகாயமேரி அவர்கள் பரிசு பெறும் மாணாக்கரை வழிநடத்த பொங்கல் விழா நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts