
திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுகா பகுதியிலுள்ள பம்பரம்சுத்தி கிராமத்தில் நடந்த திருமணவிழாவில் திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக அளித்த ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர்.
இன்று 02.02.2025 இலால்குடி தாலுகா பம்பரம்சுத்தி கிராமத்தில் இருக்கும் திருச்சி உருமு தனலெட்சுமி

மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திரு.பிச்சை அவர்கள் இல்லத்திருமண விழா இலால்குடி எம்.எல். மஹாலில் நடந்த திருமண விழாவில் வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.
இதைப்பற்றி ஆசிரியர் திரு.பிச்சை அவர்கள் கூறியதாவது அவரது வீட்டு அனைத்து விஷேசங்களிலும் தமிழ் மீது உள்ள பற்றாலும், உலகப்பொது மறை திருக்குறள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் திருக்குறள் புத்தகம் வழங்கி வருவதாகவும் கூறினார்.
மேலும் அவரது சொந்த ஊரான பம்பரம்சுத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புரவலரான ஆசிரியர் திரு பிச்சை அவர்கள் அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் திருக்குறள் புத்தகம் வழங்கி வருவதாகவும் அந்த பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமையாசிரியரும், கவிஞருமான வாளாடி திரு.இளஞ்சேட்சென்னி அவர்கள் தெரிவித்தார்.

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும்
மணமகன் சண்முகசுந்தரத்தையும்,
மணமகள்
சுமித்ரா அவர்களையும் வாழ்த்தியதோடு அல்லாமல்
திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக அளித்த ஆசிரியர் திரு.பிச்சை அவர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
சிறப்பு செய்தியாளர்,
இலால்குடி,
க.ரெங்கநாதன்,
செல்: 7540018725
