
புரட்சிப் பாவேந்தர் பேரவை, திங்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின், குளிர்மை அரங்கத்தில் இன்று 12.01.2025 மாலை நடைபெற்றது.


தென்மொழிப் பண்ணன் ஈகவரசன் அவர்கள் மொழி வணக்கம்.
முனைவர் சு. செயலாபதி வரவேற்புரை ஆற்றினார். பாவேந்தரின் “தமிழியக்கம்” என்ற தலைப்பில் மாணவி செல்வி காருண்யா நடராஜன் உரையாடினார்.

“திருவள்ளுவரும் பாவேந்தரும்” முனைவர் கு. திருமாறன் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஐயா குறள்மொழி அவர்கள் நினைவுரை வழங்கினார். திரு. ப. மாணிக்கம் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் புரட்சிப் பாவேந்தர் பேரவையின்
ஒருங்கிணைப்பாளர்கள், நெறியாளர்கள், செயற்குழுவினர், தமிழ்ச் சான்றோர்கள் கவிஞர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














