
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, நூல் அறிமுகம் – கருத்தரங்கம் இன்று 21.12.2024 மாலை இரவி சிற்றரங்கத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி பாடகர் காசிநாதன், பாவேந்தர் எழுச்சி இசையுடன் தொடங்கியது. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, மு. தியாகராஜன் தலைமை தாங்கினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, ஆ. அபிமனு, வரவேற்பு ஆற்றினார்.
தலைவர், தமிழ்நாடு தனியார் தமிழ் வழிப் பள்ளி நிர்வாகிகள், சங்கம், திரு. அ. முஸ்தபா கமால் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் இளையோர் திறன் வெளிப்பாடு, இளவல் சஞ்சய் குமார் தூய வளனார் கல்லூரி, திருச்சி,
பாவரங்கம், ஆங்கரை பைரவி, ச. வசீர் அகமது, தூய வளனார் கல்லூரி, திருச்சி.
நூல் அறிமுகம், “தமிழ் முருகன் வரலாற்று வழிகாட்டி”,


அறிவழிக்குழு, திரு. மகேஷ் கலியநாதன். ஸ்பாரோ விருது பெற்ற எழுத்தாளர் திருமதி ம. இலட்சுமி, மகளிர் ஆயம், சிறுவர் இலக்கியம் ஒரு பார்வை கருத்துரை வழங்கினார்.


தமிழிக் கலை இலக்கியப் பேரவை, திருச்சி, திரு. இனியன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, திரு. மூ.த. கவித்துவன் ஒருங்கிணைத்தார்.


