தியாகதீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் 11-01-2025 சனிக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில் சென்னை பெரம்பூர் ரமணா நகரில் சமத்துவ பொங்கல் விழாவும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்கத்தின் தலைவர் இரமணாநகர் சி – மணி அவர்கள் தலைமையில் முன்னிலை செயலாளர் எ- சுரேஷ்பீட்டர் துணைத்தலைவர்கள் சிக்கந்தர் ஓவியர்கஸ்பார். எஸ் – வேணி ஆர்- லதா இணைச்செயலாளர் எ – ஆனந்த் சி – விஜயகுமார் எம். அயூப்கான், சிறப்பு அழைப்பாளர்கள் த- கணபதி கிங் டேவிட். உமாபதி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர் இவ் விழாவில் தேசிய விருதுபெற்ற சீனிவாசன் சிலம்பாட்டக்குழு சார்பாக சிலம்பாட்டம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் இராணி அவர்கள் நன்றி கூறினார்.














