• Home
  • தமிழ்நாடு
  • திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழா நடைபெற்றது.
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழா நடைபெற்றது.

Email :320

திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் கொண்டாடும் 57 வது தேசிய நூலக வார (நவ.14-20) விழாவின் ஒரு பகுதியாக இன்று 19.11.2024

செவ்வாய்க்கிழமை மாலை திருவானைக்காவல் கல்லணை ரோட்டில் உள்ள Dr.சிற்றம்பலம் அம்சவல்லி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. கிளை நூலக வாசகர் வட்டம் 3வது முறையாக மேற்படி இல்லத்தில் உள்ள முதியோர்களை உற்சாகபடுத்தும் விதமாக முதுமை எனும் முழு நிலவு எனும் தலைப்பில் திரு. க. செல்வராஜ் (ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை துணை பதிவாளர்) அவர்களும் வாழ்த்துங்கள் வாழ்கிறோம் எனும் தலைப்பில்,

திரு.கி.சதீஷ்குமார் (பேராசிரியர் கலைக்காவேரி நுண்கலை கல்லூரி, திருச்சிராப்பள்ளி)அவர்களும் சிறப்புரையாற்றினர்.


மேற்படி நிகழ்ச்சிக்கு மருத்துவர் சி. கருணாநி அவர்கள் Dr.சிற்றம்பலம் பல் மருத்துவமனை, பெரிய கடைவீதி, திருச்சி, தலைமை தாங்கினார். திருவானைக்காவல் அரசு கிளை நூலகர் திருமதி.V.அனுஷ்யா அவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய

ராணுவகேப்டன், A.மோகன் அவர்கள் (Sponserer of Dinner for the Oldage Home)
முன்னிலை, சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர் மற்றும் சிறப்புரை ஆற்றினர். திரு. வாசன் அவர்கள் (ஓய்வு பெற்ற அதிகாரி TNEB), திரு.சங்கரன் அவர்கள்


(ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி) முனைவர்.சுப்ரமணியன் அவர்கள் (ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர்)
திரு.கி.விஜயன் அவர்கள் (மேலாளர் -இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்)
வரவேற்புரை வழங்கினார்.

வி.வே‌.விஸ்வேஸ்வரன், திருஆனைக்கா,
வாசகர் வட்ட தலைவர், அரசு கிளை நூலகம் திருவானைக்காவல், நன்றி உரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts