
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஆர்ச்சம்பட்டி கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஏழரை ஏக்கர் குளம் மறு சீரமைத்து கிராம மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா சரியாக காலை 11.00 மணிக்கு நடக்க இருக்கிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களை கோவிலிலிருந்து முதல் மரியாதை செய்து அழைத்து வருகின்ற பொழுது, தேவராட்ட நடனத்துடன் குளக்கரையில் அமைந்துள்ள மேடை நோக்கி வர இருக்கிறார்கள்.

அதன்பிறகு குளம் அர்ப்பணிப்பு விழாவும்
கல்வெட்டு திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. மறு சீரமைத்த குளமும் குளக்கரையும் கண்கொள்ளா காட்சி தருகிறது. இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை மாணவர்கள் நேர காலம் பார்க்காது தொடர் களப்பணி செய்து வருகிறார்கள்.

அதைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு மதிய விருந்தும் கிராம மக்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பேராசிரிய பெருமக்கள் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
இயக்குநர்,
விரிவாக்கத்துறை.













