• Home
  • தமிழ்நாடு
  • “இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு PUZZLE பயிற்சி”.
தமிழ்நாடு

“இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு PUZZLE பயிற்சி”.

Email :175

“இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு PUZZLE பயிற்சி”.
10.01.2025

ஆக்கம்:
எஸ் சிவக்குமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாயனூர் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சிக்கான புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன்னார்வலர் திரு. ஆர். ராஜமாணிக்கம் அவர்கள் குழந்தைகளுக்கு PUZZLE பயிற்சியை ஒருங்கிணைத்தார். சமூக ஆர்வலர் திருமதி கலாவதி சண்முகம், திருச்சி, குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்காக தேவையான PUZZLE நன்கொடையாக வழங்கினார்.

   PUZZLE குழந்தைகளின் நினைவாற்றல், முடிவெடுக்கும்  திறன் மற்றும் மனச் சோர்வை குறைத்து, விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகின்றன.

PUZZLE  குழந்தைகள் கவனச் சிதறலை குறைத்து ஒருமுகமாக செயல்படச்செய்தன.

குழந்தைகள் இப்பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் PUZZLE விளையாடினர். இது அவர்களது விடுமுறையைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தியதோடு மேலும் அவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

இம்மாதிரியான முயற்சிகள் சமூகத்தில் கல்வியமைப்பின் முக்கியத்துவத்தை மேலும் வளர்க்கும். இதன் மூலம் தாயனூர் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தனித்துவமான அடையாளம் பெற்றது.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts