சோழன் உலக சாதனை படைத்த பெல் ஊழியரின் இரண்டரை வயது மகன்!
திருவெறும்பூர் அருகேயுள்ள பெல் நிறுவன ஊழியரின் இரண்டரை வயதேயான குழந்தை ஞாபக திறனில் 26 விதமான தலைப்புகளை சொல்லி அசத்தியதற்கு சர்வதேச அளவில் இயங்கி வரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியது.

திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணி புரியும் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி
இவர்களது இரண்டரை வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின் பெயர்களை கூறுவது பழங்களின் பெயர் ஆத்திச்சூடி கலர் அடையாளம் காட்டுதல் உடலின் பாகங்களை கூறுதல் உள்ளிட்ட 26 விதமான அடையாளங்கள் பற்றி உடனுக்குடன் அடையாளப்படுத்தி கூறியதால் குழந்தையின் அசாத்திய திறமையை பாராட்டி குழந்தைக்கு சர்வதேச அளவில் இயங்கி வரும் சோழன் உலக சாதனை புத்தகம் சார்பில் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மனமகிழ் மன்றத்தில் நடந்தது.
இந்த விழாவிற்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் நிமலன் நீலமேகம் தலைமை வகித்தார். மனமகிழ் மன்ற மகளிர் தலைவி சாந்தி ரவீந்திரன் முன்னிலை வகித்தார் பெல் நிறுவன பொது மேலாளர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹர்ஷவர்த்தனுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவன விருதை வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில் பெல் ஊழியர்கள் மற்றும் பெல் ஊரக பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பொதுச்செயலாளர் திருமதி ஆர்த்தி நிமலன் பெல் தமிழ் பயிற்று மொழி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஸ்ரீ தேவி பெல் இடிஎ தலைவர் திரு சிவக்குமார் டின்னீ டாட்ஸ் பள்ளி

தலைமை ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி ஐயப்பா மற்றும் டாக்டர் அம்பேத்கர் எம்பிளாயிஸ் யூனியன் தேர்வு பயிற்சி பள்ளி நிறுவனர் திரு புஷ்பராஜ் பெல் மனமகிழ் மன்ற துணைத் தலைவர் திரு லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை குழந்தையை வாழ்த்தினார்
இவ்விழாவிற்கான ஏற்பாட்டை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் திருச்சி மண்டல தலைவர் கராத்தே செல்வராஜ் செய்திருந்தார் சாதனை குழந்தையின் பெற்றோர் திரு அன்பு ஆதவன் ஆர்த்தி ஆதவன் ஆகியோர் விழாவிற்கு நன்றி கூறினர்.














