
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் ன திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மாவட்ட குழந்தை நலக்குழு மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கலையரங்க திருமண மண்டப வளகாத்தில் 13.01.25 நடைபெற்றது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
ராகுல்காந்தி சமத்துவ பொங்கல் விழா வினை தொடங்கி வைத்தார்.
பொங்கல் வைத்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை நல குழு தலைவர் மோகன் உறுப்பினர்கள் பிரபு, சியாமளா பவுலின் சோபியா ராணி நேத்தலிக் டேன் ஆஃப் பாப்பு மற்றும் இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















